பெட்ரோல் ரோன் 95 உதவித் தொகை தொடர்பில் மற்றொரு ஆச்சரியம் காத்திருக்கிறது

ஜுன் 28-

பெட்ரோல் ரோன் 95 உதவித் தொகை தொடர்பில் மற்றொரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கோடி இன்று காட்டியுள்ளார்.

பெட்ரோல் ரோன் 95 உதவித் தொகையை அற்றுவது தொடர்பில் எந்தவொரு முடிவையும் முன்கூட்டியே அறிவிப்பதில்லை என்ற டீசலுக்கான முந்தைய வியூகத்தை அரசாங்கம் கடைப்பிடிக்கவிருப்பதாக ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

சீனா, Dalian- னில் உலக பொருளாதார ஆய்வரங்கில் கலந்து கொண்ட பின்னர் ப்ளூம்பெர்க்- கிற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ரபிஸி ரம்லி மேற்கண்டவாறு கூறினார்.

பெட்ரோல் ரோன் 95 தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள அந்த வியூகம், இந்த ஆண்டில் அமல்படுத்தப்படும்.

டீசல் அனைவருக்கும் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று அரசாங்கத்தின் அந்த திட்டம் குறித்து பொது மக்களுக்கு இப்போது அறிவிக்க இயலாது என்று ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS