திடீர் வெள்ளத்தினால் ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது

மலாக்கா, ஜுன் 29-

மலாக்காவில் நேற்று இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஒன்பது குடும்பங்களை சேர்ந்த மொத்தம் 47 பேர் அலோர் கஜா, துரியன் துங்கல், பலாய் ராய புக்கிட் பலாய் என்ற இடத்தில் உள்ள ஒரு நிவாரண மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்போங் புக்கிட் பாலா மற்றும் கம்போங் புக்கிட் தம்புன் ஆகிய பகுதிகளில் குடியேறியிருந்தவர்கள் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தற்போது நிவாரண மையத்தில் வைக்கப்பட்டிருப்பதாக மலாக்கா மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலாளர் கமருல்ஸ்யா முஸ்லிம் இன்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

மேலும், கனத்த மழை மற்றும் புயலின் காரணமாக ஜாலான் சுங்கை புதாட்திலிருந்து பத்து பெரெண்டாமிற்கு செ‌ல்லு‌ம் பாதையில் மரம் ஒன்று சாலையில் விழுந்ததில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பாதிக்கப்பட்டிருப்பதாக கமருல்ஸ்யா முஸ்லிம் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS