பெலூரன், ஜுன் 29-
சபா,ஜாலான் சபி நங்கோசஹ்வில் உள்ள ஒரு தோட்டத்தில் டிராக்டர் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்த வேளை மேலும் நால்வர் படுங்காயமடைந்தனர்.
இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 28 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
29 வயது இந்தோனேசியா பிரஜை ஒருவர், ஆறு தொழிலாளர்களுடன் பணியை தொடங்குவதற்காக தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்த வேளை, டிராக்டர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தடம் புரண்டதாக பெலூரன் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஹசன் மஜித் கூறினார்.
மேலும், 22 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய நால்வர் காயத்துடன் உயிர் தப்பியதாக ஹசன் மஜித் தகவல் அளித்தார்.