காஜாங், ஜுன் 29-
காஜாங்கில் உள்ள ஒரு தேசிய வகை பள்ளியை சேர்ந்த மாணவன் ஒருவன் வளாகத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
நேற்று மாலை 5.50 மணியளவில் இச்சம்பவத்தை குறித்து தமது தரப்புக்கு புகார் ஒன்று கிடைக்கப் பெற்றதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கோமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.
பாதிக்கப்பட்ட 13 வயது மாணவனுக்கு தலை மற்றும் உடலில் ஏற்பட்ட கடும் காயங்களினால் காஜாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நஸ்ரோன் அப்துல்l ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்தார்.
இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 31 (1) (a) பிரிவின் கீழ் அம்மாணவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.