புத்ராஜெயா, ஜூன் 29-
வரும் ஜுலை முதல் தேதியிலிருந்து டிசம்பர் 31 ஆம் தேதி தேதி வரையில் வீட்டுப் பயனீட்டாளர்களுக்கான மின்சாரக் கட்டண விகிதம் உயர்த்தப்படாது. மாறாக, தற்போது அமலில் இருந்து வரும் குறைந்த மின்சாரக் கட்டண விகிதம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று எரிபொருள், நீர் உருமாற்று அமைச்சு அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாதது மூலம் தீபகற்ப மலேசியாவில் 82 லட்சம் வீட்டு பயனீட்டாளர்கள் நன்மை பெறுவர்.
மணிக்கு கிலோ வாட் முதல் 1,500 கிலோ வாட் மின்சாரத்தை பயன்படுத்தும் பயனீட்டாளர்களுக்கு நடப்பு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று அந்த அமைச்சு அறிவித்துள்ளது.