கோலாலம்பூர், ஜூன் 29-
கோலாலம்பூர் மாநகர் மன்றம், சாலை போக்குவரத்து தொடர்புடைய சம்மன்களுக்கு விதிக்கப்படும் Kompaun அபராதத் தொகையை வரும் ஜுலை முதல் தேதியிலிருந்து உயர்த்தவிருக்கிறது.
மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான சம்மன்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகைக்கான காலக்கெடுவைப் பொறுத்து இந்த தொகை நிர்ணயிக்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு விதிக்கப்படும் 30 வெள்ளி அபராதத் தொகை 15 நாட்களுக்குள் செலுத்தியாக வேண்டும். 16 முதல் 30 நாட்களுக்குள் செலுத்தினால் அபராதத் தொகை 50 வெள்ளியாக உயர்த்தப்படும். 31 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தினால் 80 வெள்ளியாக நிர்ணயிக்கப்படும் என்ற கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிவித்துள்ளது.
கார்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ஒரு மாதத்திற்குள் செலுத்தத் தவறினால் 100 வெள்ளியாக உயர்த்தப்படும் என்று அது தெரிவித்துள்ளது.