இந்திய தூதரகம் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29-
இந்தியாவிற்கு சுற்றலா மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு நாளை மறுநாள் ஜுலை முதல் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு ஜுலை 30 ஆம் தேதி வரை எந்தவொரு கட்டணமின்றி இலவச E விசா சலுகை வழங்கப்படும் என்று மலேசியாவிற்கான இந்திய தூதரகம் இன்று மாலையில் அறிவித்துள்ளது.
மலேசியர்கள் இந்தியாவிற்கு இரண்டு முறை செல்வதற்கு இரட்டை நுழைவிற்கான eTourist விசா வழங்கப்படும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்றாலும் இதர வகையான பயண முறைகளுக்கு விண்ணப்பத்தாரர்களுக்கு பரிந்துரைக்கப்படும் விசா கட்டணத்தை அவர்கள் செலுத்த வேண்டும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக eMedical Attendant, eAyush மற்றும் eEmergency ( இ எமர்ஜென்சி ) போன்ற அவசர தேவைகளுக்கான பயணங்களுக்கு இந்திய விசாவிற்கு விண்ணப்பம் செய்கின்றவர்கள் அதற்கான விசா கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
தவிர eTourist விசா மற்றும் பிற eVisa போன்றவற்றுக்கு தற்போது நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.