ஷா ஆலம் ,, ஜூலை 02-
ஸ்.பி.ம் தேர்வில் 10 A க்கும் மேல் பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கப்படுகிறது.
அதேவேளையில் குறைந்த அடைவு நிலையைக் கொண்ட பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கும் அரசாங்கம் உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று மூடா கட்சியின் இடைக்காலத் தலைவர் அமிர ஐஸ்யா அப்துல் அஜீஸ் கேட்டுக்கொண்டார்.
மலேசிய தேசியக் கல்வி முறை இன்னமும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை பிரித்து வைத்திருக்கிறது என்று அமிர ஐஸ்யா குறிப்பிட்டார்.
எனினும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை தேசிய கல்வி முறையில் இணைப்பதற்கும், அவர்களுக்கு உரிய உயர் கல்வி வாய்ப்பு வழங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ள திட்டத்தின் அமலாக்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று அமிர ஐஸ்யா கேட்டுக்கொண்டார்.