கருத்துரைக்க மறுத்து விட்டார் ஃபதில்லா யூசுப்

கோலாலம்பூர், ஜூலை 02-

அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மானியத்தை கூட்டரசு அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்று கோரி, 200 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டத்தை முன்னெடுத்த மூவார் எம்.பி. சையது சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் – னின் போராட்டத்தை தொடர்ந்து அந்த மானிய ஒதுக்கீடு தொடர்பில் துணைப்பிரதமர் கருத்துரைக்க மறுத்து விட்டார் ஃபதில்லா யூசுப் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

இது குறித்து செய்தியாளர்கள் இன்று வினவியபோது, தாம் முதலில் ஓடி முடிக்கும் வரை சற்று காத்திருங்கள் என்று சிரிந்தப்படி ஃபதில்லா யூசுப் கிண்டல் அடித்தார்.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு 40 லட்சம் வெள்ளி வீதம் 5 ஆண்டுகளுக்கு 2 கோடி வெள்ளி மானியம் ஒதுக்கப்படுவதைப் போல எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த வெள்ளிக்கிழமை மூவாரில் தமது நெடுந்தூரத்தை தொடங்கிய சையது சாதிக், நான்கு நாட்களுக்கு பிறகு இன்று திங்கட்கிழமை, நாடாளுமன்ற கட்டடத்தில் வெற்றிகரமாக முடித்தார்.

WATCH OUR LATEST NEWS