ஹோட்டல் துறையினரை குறி வைக்கும் மோசடிக் குற்றங்கள்

பெட்டாலிங் ஜெயா,ஜுலை 02-

மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்வோரையும், ஹோட்டல் துறையினரையும் குறிவைக்கும் மோசடிக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்கொள்ள மேலும் கடுமையான விதிமுறைகளும் வலுவான பாதுகாப்பும் அவசியம் என்று மலேசிய ஹோட்டல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலேசிய ஹோட்டல் துறையினருக்கு இணையம் வழி இயங்கும் சுற்றுப்பயண முகவர்களுக்கும் இடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பு இருப்பதால் மலேசியாவில் இது போன்ற மோசடிகள் அரிது என்று மலிவுக் கட்டணம் மற்றும் வர்த்தக ஹோட்டல் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீ கணேஷ் மைக்கல் தெரிவித்தார்.

இருப்பினும் இத்தகைய மோசடிக் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று அவர் குறிப்பிட்டார். இணையம் வழி இயங்கும் சுற்றுப் பயண முகவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்துக் தேவையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீ கணேஷ் மைக்கல் வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS