கோத்தா கினபாலு , ஜுலை 02-
கடும் வெள்ளத்தின் காரணமாக சபாவில் இன்று பத்து பள்ளிககள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பெனாம்பாங், பாப்பர், சிபிடாங் மற்றும் துவாரன் மாவட்டங்களைச் சேர்ந்த பத்து பள்ளிகள் மூடப்பட்டது மூலம் 5 ஆயிரத்து 077 மாணவர்களும், 307 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த அறிவிப்பு வரும் வரையில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று சபா கல்வி இயக்குநர் ரைசின் சைடின் தெரிவித்துள்ளார்.