கோலாலம்பூர் , ஜுலை 02-
கருப்பு பாறை விவகாரம் தொடர்பான விவாதத்தில் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மிக கெட்டிக்காரத்தனமாக பேசுவாதாக நினைத்து நாட்டின் நலன் சார்ந்த அம்சங்களுக்கு ஊறுவிளைவிக்க வேண்டாம் என்று பிரதமர் எச்சரித்தார்.
இஸ்ரேலிய நாட்டுடன் தொடர்புடைய பிரச்னை தொடர்பான எந்தவொரு விவாதமும் வளரும் நாடான மலேசியவின் நலன்களை பாதிக்கலாம் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.
மலேசியாவில் நீண்ட காலமாகவே முதலீடு செய்த வருகின்ற நிறுவனங்கள், இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மலேசியாவின் நிலைப்பாட்டை தடுத்ததில்லை என்று பிரதமர் விளக்கினார்.
இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறை பணியாளர்களுடனான மாதாந்திர பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.