ஈப்போ,ஜுலை 02-
ஈப்போ, மேரு-வில் வாடகை வீடொன்றில் தனது ஆண் நண்பருடன் கல்வத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் உயர்கல்விக் கூட மாணவி ஒருவரை சமய இலாகா கைது செய்துள்ளது.
பொது மக்கள் அளித்த தகவலை தொடர்ந்து நேற்று காலை 11.20 மணியளவில் அந்த வாடகை வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் உயர் கல்விக் கூட்டத்தைச் சேர்ந்த் 22 வயது மாணவியும், 20 வயதுடைய அவரின் ஆண் நண்பரும் பிடிபட்டனர்.
தம்முடன் பயிலும் அனைத்து மாணவிகளும், கிராமங்களில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டதால் தமது பாதுகாப்பை கருதி, ஆண் நண்பரின் வீட்டில் தங்கியதாக அந்த மாணவி காரணம் கூறியுள்ளர் என்று பேரக் மாநில இஸ்லாமிய சமய இலாகாவின் இயக்குநர் ஹரித் ஃபட்ஸிலா அப்துல் ஹலிம் தெரிவித்தார்.