கோலாலம்பூர், ஜூலை 02-
சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக சாலை போக்குவரத்து இலாகாவான JPJ இன்று மாபெரும் சோதனை நடவடிக்கையை முடுக்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை கெங்திங் ஹைலேண்ட்ஸ் – சாலைவயில் சுற்றுலா- பேருந்து தடம் புரண்டு இருவர் மாண்ட வேளையில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த பேருந்தை செலுத்திய 32 வயது ஓட்டுநருக்கு லைசென்ஸ் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து சுற்றுலா பேருந்துகளை இலக்காக கொண்டு இந்த சோதனை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக JPJ அமலாக்க இயக்குநர் முஹம்மது கிஃப்லி மா ஹாசன் தெரிவித்தார். இந்தா சோதனை நடவடிக்கை ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகும் தொடர சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டர்.