தபா, ஜூலை 6-
நாட்டில் மிக அருகி வரும் புலி இனமாக வகைப்படுத்துள்ள மலாயப் புலி ஒன்று, காரினால் மோதப்பட்டு உயிரிழந்தது. அந்த மலாயப் புலி, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பாவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் அடிப்பட்ட அந்தப்புலி, மெதுவாக நகர்ந்து, அருகில் உள்ள சிமெண்ட் கால்வாயில் உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக தாங்கள் புகார் பெற்று இருப்பதாக வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காவான PERHILITAN, பேரா மாநில இயக்குநர் யூசப் ஷெரீப் உறுதிப்படுத்தினார்.
அந்த மலாயப் புலியின் மொத்த எடை 120 கிலோவாகும். அடுத்த கட்ட நடவடிக்கைக்கான அந்த புலியின் உடல், பேரா, Sungai-யில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் PERHILITAN நடத்திய ஆய்வில் மலேசியாவில் உள்ள அடர்ந்து காடுகளில் மலாயப்புலிகளின் எண்ணிக்கை 150க்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்துள்ளது.