சிரம்பான், ஜூலை 6-
சிரம்பான், சுங்கை காடுட், தமான் துவாங்கு ஜாஃபர் பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா, நாளை ஜுலை 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
காலை 6 மணிக்கு ஆலய நித்ய பூஜை, சங்கல்பம், கலச பூஜை மற்றும் வேள்ளி வழிபாடுடன் ஆலயத் திருவிழா தொடங்கும். காலை 8.00 மணிக்கு ஆற்றங்கரைக்குச் சென்று பால்குடம் ஊர்வலத்திற்கு பக்தர்கள் தயாராகுவார்கள். 8.30 மணிக்கு ஆற்றங்கரையிலிருந்து ஆலயத்தை நோக்கிப் பால்குடம் ஊர்வலம் நடைபெறும்.
மாலையில் ஆலய நித்ய பூஜைக்கு பிறகு இரவு 7.30 மணிக்கு ஆலயத்திலிருந்து பஞ்சமூர்த்திகள் இரதம் புறப்படும் என்கிறார் ஆலயத்தின் குருக்களான சிவஸ்ரீ அ. புவிதர்ஷ குருக்கள்
பக்தர்கள் அனைவரும் இரத ஊரவலத்தின் போது அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூடாரத்தில் நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இரத ஊர்வலம் தொடர்பில் மேல் விவரங்களுக்கு 019- 788 0367 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாமஎன்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.