பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6-
இன்று நடைபெற்று வரும் பினாங்கு, Sungai Bakap சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் வாக்களிப்பில் மாலை 5 மணி வரையில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 3.30 மணியளவில் 51.32 விழுக்காடு பதிவாகியிருந்த வேளையில் மாலை 5 மணியளவில் 60 விழுக்காட்டிற்கும் கூடுதலாக பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையமான SPR தெரிவித்துள்ளது.
39 ஆயிரத்து 151 பதிவுப் பெற்ற வாக்காளர்களை கொண்டுள்ள இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜூஹாரி அரிஃபினுக்கும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஆபிதீன் இஸ்மாயிலுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் முடிவு இன்றிரவு 9.30 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.