கூச்சிங், ஜூலை 6 –
ரவாக், Limbang வனப்பகுதியில் Op Ukur சோதனை நடவடிக்கையின் போது, மலேசியா – புருணை எல்லைப்பகுதியில் கடந்த ஜுன் 18 ஆம் தேதி காணாமல் போன இராணுவ வீரர் ஒருவர், 18 நாட்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டார்.
ப்ரீபெட் முஹம்மது சியாபிக் ஹில்மி அப்துல் ஹலீம் என்ற அந்த இராணுவ வீரர்கள் இன்று காலை 11.29 மணியளவில் SAR ( சார்) மீட்புப்படையினால் கண்டு பிடிக்கப்பட்டதாக மலேசிய ஆயுதப்படையின் பொது உறவு பிரிவு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மிக பலவீனமான சூழ்நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட அந்த ஆடவர், தம் வசம் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் இதர உபகரணங்களை கொண்டு இருந்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.