மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் அனைத்து இன மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவர்

பாசிர் மாஸ், ஜூலை 6-

மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற அனைத்து இன மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்ற அரசாங்கத்தின் முடிவில் பூமிபுத்ரா மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வாய்ப்பு ஒரு போதும் பாதிக்கப்படாது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார்.

தகுதி அடிப்படையில் அனைத்து இன மாணவர்களும் மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களேயானால் பூமிபுத்ரா கோட்டா சுருங்கிவிடும் என்று இதற்கு முன்பு பலர் சர்ச்சை செய்து வருவது தொடர்பில் துணைப்பிரதமர் இவ்விளக்கத்தை தந்துள்ளார்.

இந்த நாட்டில் SPM தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும்மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்பூண்டு இருப்பதையும் அகமட் ஜாஹிட் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS