லோலாலம்பூர், ஜூலை 6-
தாப்பாவில் சமூக மையம் ஒன்றை சீர்படுத்தப்படுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையானது, HRD Corp.பின் சொந்த முடிவாகும் என்று முன்னாள் மனித வள அமைச்சரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
அன்றைய மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் சமூக மையத்தை சீர்படுத்துவதற்கு தாப்பாவை HRD Corp. தேர்வு செய்ததாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி ஷாகூல் ஹமிட், பொது கணக்குக்குழு விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஹாகுல் ஹமிட்டின் இந்த வாக்குமூலம் தொடர்பில் மலேசிய கினியிடம் பேசிய டத்தோஸ்ரீ சரவணன், கற்றல், கற்பித்தல் மேம்பாடு தொடர்பில் இத்தகைய வசதிகள் மூலம் ஓராங் அஸ்லி சமூகத்திற்கு ஆதரவு நல்க வேண்டிய அவசியம் இருந்ததாக குறிப்பிட்டார்.
எனினும் இந்த மையத்தை நிறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம், சீர்படுத்த வேண்டிய முறைகள் மற்றும் அதற்கான செலவீனம் அனைத்தையும் முடிவு செய்தது HRD Corp. வாரியமே என்று சரவணன் பதில் அளித்துள்ளார்.