இந்திய சமூகத்தை அரசாங்கம் புறக்கணிக்கிறதா? / குற்றச்சாட்டை மறுத்தார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர், ஜூலை 08-

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், இந்திய சமூகத்தை எல்லா நிலைகளிலும் புறக்கணித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று வன்மையாக மறுத்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டில் எள்ளவும் உண்மையில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

இந்திய சமூகத்தின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து கூடுதலாக நிதியை அதிகரித்து வருவது மூலம் தனது மடானி அரசாங்கம் , இந்தியர்களின் நலனில் எத்தகைய அக்கறையும், சிரத்தையும் கொண்டுள்ளது என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்று பிரதமர் விளக்கினார்.

இந்தியர்களின் சமூகவியல் பொருளாதரா உருமாற்றுப் பிரவான மித்ராவிற்கு இதற்கு முன்பு அரசாங்கம் பத்து கோடி வெள்ளியை நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத் தவிர தெக்குன் போன்ற தொழில் முனைவர்கள் திட்டத்திற்கு இந்திய தொழில்முனைவர்களுக்கான 5 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில் இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகள் குறித்து இந்திய சமுதாயத்தை பிரநிதிநிதிக்கக்கூடிய தலைவர்கள் தம்முடன் பேசுவார்களேயானால் இந்தியர்களின் பிரச்னையை இயன்றவரை தீர்ப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தமது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான தம்புனில் இன்று இந்திய சமூகத்துடனான ஒன்றுக்கூடும் நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் பிரதமர் பிரதமர் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS