அலோர் சேதார், ஜூலை 10-
கெடா மாநிலத்தில் சூதாட்டத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு செய்த அம்மாநிலத்தின் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனுசியின் மனு மீண்டும் மறுபரிசீலனையில் உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு, கெடா மாநில அரசு இனி சூதாட்டத்திற்கான லைசன்ஸ்சை வெளியிடாது எனக் கூறியதால், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி அம்மாநிலத்தில் சூதாட்ட நிலையங்கள் செயல்படாமல் நின்றுள்ளது. இது தொடர்பாக, நீதிமன்ற தடை உத்தரவிற்காக விண்ணப்பித்திருந்த கெடா மாநில அரசின் விண்ணப்பம் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் நாள் தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் பரிசீலனையில் உள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கெடா மாநிலத்தின் மந்திரி பெசார் சனூசி, தாம் கடவுள் இட்ட கட்டளைப் பின்பற்றி நடப்பதால், இந்த தடை உத்தரவை நீதிமன்றத்தில் மனு செய்ததாக கூறியதுடன் கடவுளுக்கு எதிராக செயல்படுகின்றவர்கள் இறுதி காலாத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் என கூறி உள்ளார்.