எலி மருந்து கலக்கப்பட்ட, நொறுக்குத் தீணி உட்கொண்ட சிறுவர் உயிரிழப்பு; 6 நாள்களுக்கு தடுத்துவைப்பு

கெடா , ஜூலை 11-

கெடா, கூலிம், லாபு பெசார், கம்போங் பாடாங் உபி எனும் பகுதியில், எலி மருந்து கலக்கப்பட்ட, நொறுக்குத் தீணியை உட்கொண்ட இரு சிறார்களில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, 33 வயது தோட்டக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பண்டார் பாரு, லுபுக் பூந்டார்-ரில் கைது செய்யப்பட்ட அவ்வாடவரை, இன்று தொடங்கி 6 நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்துவைக்க, சேஸ்யேன் நீதிமன்ற நீதிபதி மிர்சா மொஹமட் அனுமதியளித்தார்.

அவ்வாடவர் மீது போதைப்பொருள் உள்பட முந்தையக் குற்றப்பதிவுகள் இல்லாதது தொடக்கக்கட்ட விசாரணையில், உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் மோஹட் அஷீஸ்குள் மோஹட் காய்ரி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS