புக்கிட் மேர்தஜம், ஜூலை 11-
பினாங்கு, புக்கிட் மேர்தஜம், தாமான் ஸ்ரீ ரம்பை -யிலுள்ள குடியிருப்பு பகுதியின் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த HONDA WR-V ரக வாகனத்திலிருந்து, அழுகிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
நேற்று மாலை மணி 5.30 அளவில், சம்பந்தப்பட்ட வாகனத்திலிருந்து வெளியாகியிருந்த நீர் துளிகளை கண்ட பொதுமக்கள் சிலர், அந்த வாகனத்திடம் சென்று நோட்டமிட்ட போது, அக்காரின் முன்னிருக்கைகளில் அவ்விரு சடலங்களைக் கண்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க அவ்விரு பெண்களும் இறந்து 5 நாள்களுக்கும் மேல் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வேளை, உடற்கூறு ஆய்வுகாக சடலங்கள் புக்கிட் மேர்தஜம் மருத்துமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.