கோலாலம்பூர், ஜூலை 11-
மனிதவள மேம்பாட்டு நிதி – HRD CORP-ப்பின் நிதி நிர்வாகம் குறித்து, தேசிய கணக்காய்வாளரின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ள விவகாரம் குறித்து, போலிசில் புகாரளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
தற்போதைக்கு, அவ்விவகாரம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகாரளிக்கப்ப்பட்டிருப்பதோடு, அக்கழகத்தின் நிதியை தணிக்கை செய்வதற்கு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
அவ்விவகாரத்தில், யாரையும் தமது தரப்பு தற்காக்காது என கூறியுள்ள ஸ்டீவன் சிம் , குற்றம் புரிந்த தரப்பினர்கள் மீது பாகுபாடு பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.