கோலாலம்பூர், ஜூலை 11-
போட்டிகளில் நேர்மையாக நடந்துக்கொள்ளாத பங்கேற்பாளர்களை, அவற்றின் ஏற்பாட்டுக்குழுவினர் கருப்பு பட்டியலிட வேண்டுமென JOHOR-ரின் இளைஞர் மற்றும் விளையாட்டுக்கான செயற்குழு தலைவர் ஹேரி மட் ஷா கோரிக்கை விடுத்தார்.
அண்மையில், ஜொகூர், டேசரு -வில் நடைபெற்ற ஓட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டிருந்த மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சயீத் ஸட்டி சுயேட் அப்துல் ரஹ்மான், அப்போட்டியை முழுமையாக நிறைவு செய்யவில்லை என எழுந்துள்ள சர்ச்சை குறித்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.
சம்பந்தப்பட்ட போட்டியின் ஏற்பாட்டு குழுவினரை தாம் விசாரித்ததில், சயீத் ஸட்டி, நிர்ணயிக்கப்பட்ட வழியில் U-TURN செய்யாததது தெரிய வந்துள்ளது.
வருங்காலத்தில் அது போன்ற ஓட்ட போட்டியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகாமல் இருக்க, நேர்மையற்ற பங்கேற்பாளர்களை கருப்புப்பட்டியலிடுவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என ஹேரி மட் ஷா கூறினார்.