HRD CORP கழகத்தின் நிதி மீதான தனியார் தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை செப்டம்பரில் தாக்கல் செய்யப்பட வேண்டும்!

கோலாலம்பூர், ஜூலை 11-

அந்நிய தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்திலிருந்து பெறப்பட்ட 3.77 பில்லியன் வெள்ளி நிதியை, மனிதவள மேம்பாட்டு கழகம் – HRD CORP, முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ள விவகாரம்.

அக்கழகத்தின் நிதியை தணிக்கை செய்ய தனியார் நிறுவனத்தை நியமித்துள்ள மனிதவள அமைச்சை, தேசிய கணக்காய்வு செயற்குழு – PAC தலைவர் மாஸ் எர்மியாய்தி சம்சுதீன் வெகுவாக பாராட்டினார்.

HRD CORP நிதி விவகாரத்தில், ஏதும் மூடி மறைக்கப்படாது என உத்தரவாதம் அளித்திருந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் -ம்மின் கடப்பாட்டை அது காட்டுவதாக புகழ்ந்துரைத்த மாஸ் எர்மியாய்தி , வரும் செப்டம்பரில் அதன் அறிக்கை, தமது தரப்பிடம் தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் எதிர்பார்ப்பை முன்வைத்தார்.

WATCH OUR LATEST NEWS