டிஏபி துணைத் தலைவர் தெரசா கோக், சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் சீன வாக்காளர்களை வாக்களிக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்து கருத்து தெரிவித்துள்ளார்

சுங்கை பக்காப்,ஜூலை 11-

சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் 47 விழுக்காடு சீன வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வந்ததைக் குறிப்பிடுகையில், செபூத்தே எம்.பியுமான அவர் இது எங்கள் தவறு அல்ல என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் பெரிய அளவிலான பேரணி நடத்த தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் கோல குபு பாரு இடைத்தேர்தலின் உதாரணத்தையும் அவர் மேற்கோள் காட்டினார். அங்கு பெரிய அளவிலான பேரணிகளை நடத்த வேண்டாம் என்று டிஏபி கேட்டுக் கொள்ளப்பட்டது என்று கூறினார்.

மலாய் டிஏபி பிரதிநிதிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம், ஆனால் அங்குள்ள மலாய்க்காரர்கள் எங்களுக்கு ஆதரவாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.

சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் சீன வாக்காளர்களை வாக்களிக்க வற்புறுத்தத் தவறியதை அம்னோ கட்சியினர் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுவதை அடுத்து, கோக் இவ்வாறு தெரிவித்தார்!

WATCH OUR LATEST NEWS