பினாங்கு, ஜூலை 11-
ஹலால் மேலாண்மைப் பிரிவு மற்றும் பினாங்கு இஸ்லாமிய சமய விவகாரத் துறை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட நடவடிக்கையின் வாயிலாக காலாவதியான மலேசிய ஹலால் லோகோ பயன்படுத்தப்பட்டதைத் கண்டறிந்ததாக பினாங்கு KPDN இயக்குநர் எஸ் ஜெகன் தெரிவித்தார்.
இதையடுத்து, காலாவதியான ஹலால் லோகோ முத்திரையிடப்பட்ட 6,748 வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாக்கிம் அல்லது மாநில இஸ்லாமிய மத கவுன்சிலான MAIN ஆகியவற்றின் சான்றிதழ் இல்லாமல் மலேசிய ஹலால் லோகோவைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஜெகன் வணிகர்களை எச்சரித்தார்!