சமூக ஊடகங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தகவல் தொடர்பு அமைச்சு மற்றும் மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையமான MCMC ஆகியவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூர், ஜூலை 11

நேற்று காலை இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற சந்திப்பின் போது சுல்தான் இப்ராஹிம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தகவல் தொடர்பு அமைச்சர்ஃபாமி பட்சில் கூறினார்,

இணைய மிரட்டலால் தனது உயிரை மாய்த்துக் கொண்டவரின் சம்பவம் குறித்தும் சுல்தான் இப்ராஹிமுக்கு ஃபஹ்மி விளக்கினார்.

இது குறித்து மாமன்னர் தனது கவலையை வெளிப்படுத்தியதாக இன்று நாடாளுமன்ற கட்டிடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் ஃபாமி கூறினார்.

சமூக ஊடகங்களை வாதங்களுக்காக அல்லது மற்றவர்களை அவமானப்படுத்துவதற்காக தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தினார், ஏனெனில் இதுபோன்ற செயல்கள் பிளவு மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும் என்று மாமன்னர் கூறியதாக ஃபாமி தெரிவித்தார்.

எனவே, சமூக ஊடகங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான தளமாக இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை அமைச்சு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தீவிரப்படுத்தும் என்று ஃபாமி கூறினார்!

WATCH OUR LATEST NEWS