அது சட்டத்திற்கு உட்பட்டதே! – அன்வார்
கோலாலம்பூர், ஜூலை 11
பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் இருக்கைகளை காலி செய்ய வேண்டியதில்லை என்று மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் எடுத்த முடிவை, அது சட்டத்திற்கு உட்பட்டே செய்யப்பட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆதரித்தார்.
ஊடகங்களிடம் பேசிய அன்வார், பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசின், கூட்டாட்சி அரசியலமைப்பின் கட்சித் தாவல் சட்டத்தின் விளக்கத்தை தேர்ந்தெடுத்துப் படிக்காமல், முழுமையாகப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்
சபாநாயகரின் தீர்மானம் சட்டத்தின் அடிப்படையிலானது என்றும், இது போன்ற விவகாரங்களில் பாரபட்சமின்றி தீர்ப்பளிக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்