குவா மூசாங்,ஜூலை 11-
இன்று காலை 7.30 மணியளவில், குவா மூசாங்- கோலா க்ராய் சாலையில் ஏற்பட்ட விபத்தில் டிரேல்லர் லாரி ஓட்டுனர் சம்பவம் நடந்த இடத்திலையே பலியானார்.
தானா மேராவைச் சேர்ந்த அந்த 27 வயது ஓட்டுனர், தான் ஓட்டி வந்த டிரேல்லர் லோரி கட்டுப்பாட்டை இழந்ததால் அது சாலை ஓரத்தில் கவிழ்ந்ததில் ஒட்டுனர் அதில் மாட்டிக் கொண்டு மரணமடந்துள்ளார் என குவா மூசாங்- வாட்டார போலீஸ் தலைவர், சுப்பரின்டென்டென்ட் சிக் சூன் போதெரிவித்தார்.
அந்த லாரியில் ஓட்டுனருடன் பயணித்த உதவியாளர் கோலா க்ரை, சுல்தான் இஸ்மாயில் பெட்ரா (HSIP) பொது மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.