மலாக்கா, ஜூலை 11-
மலாக்கா பண்டார் ஹிலிர் பிளாசா மஹகொத்தா அருகில் வாடகைக்கு தங்கிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 12 மற்றும் 2 வயது நிரம்பிய சகோதரர்கள் சம்பவம் நடந்த இடத்திலையே பலியாகி உள்ளனர்.
இன்று மதியம் 1.00 மணியளவில், தாங்கள் தங்கியிருந்த அறையில் கறுப்பி புகை வந்ததை கண்டு, தீ ஏற்பட்டுள்ளதை உணர்ந்த தாயும் தந்தையும் குழந்தைகளைக் காப்பற்ற முயற்சித்த நிலையில் அது பலன் அளிக்காமல், மூவரில் இருவர் பலியாகினர்.
தீயில் பாதிக்கப்பட்ட குடும்பமாது தற்பொழுது அவசர சிகிச்சை ப்ரிவில் இருப்பதாகவும் அவரின் கணவரும் மற்றொரு குழந்தையும் சிகிச்சைப் பெற்று வருவதாக மலாக்கா தெங்கா வட்டார காவல் நிலையத்தின்,துணை கமிசியோனிற் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.