ஜொகூர், மாசை லாமா-வில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது

ஜொகூர், ஜூலை 11-

ஜொகூர், மாசை லாமா பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ மகா தவமுனீஸ்வரர் ஶ்ரீ மகா சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வரும் ஜூலை 15-ம் தேதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது.

திருவிழாவின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் சிறப்பு உபயங்கள் நடைபெற்று வருகின்றன . மற்றும் வரும் ஜூலை 13-ம் தேதி சனிக்கிழமை அக்னி சட்டி மற்றும் பூச்சொரிதல் திருவிழா, ஜூலை 14-ம் தேதி அஷ்ட வாராஶ்ரீ மூல மந்திர ஜப ஹோமம் ,ஜூலை 15-ம் தேதி ஆஷாட நவராத்திரி பால்குடம் திருவிழா நடைபெறவுள்ளது .

அருள்மிகு ஶ்ரீ மகா தவ முனிஸ்வரர் ஶ்ரீ மகா சமுன்டீஸ்வரி அம்மன் திருகோவில் திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மையப்பர் திருவருளை பெற்று இன்புறுமாறு ஆலாய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS