பாசீர் கூடாங் , ஜூலை 11-
கடந்த ஜூலை 7 ஆம் நாள் தொடங்கி வீட்டினுள் நுழைய அனுமதி மறுத்த 54 மற்றும் 56 வயது மதிக்கத்த பெற்றோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளன.
அந்த 13 வயது மகன் படுக்க இடம் இல்லாமல் வீட்டின் வாசலில் படுத்துக் கொண்டிருந்த காணொளி ஒன்று முகநூலில் பதிவேற்றம் கண்டதன் தொடர்ச்சியாக போலீசா நேற்று முந்தினம் பாசீர் கூடாங் ஜோகூரில் அமைந்துள்ள அடுக்குமாடி வீட்டில் இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஶ்ரீ அலாம் வட்டார போலீஸ் நிலைய தலைவர் சுப்ரிண்டன் மோஹட் சோஹைமி இஷாக்தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் Seksyen 31(1)(a) 2001 குழந்தை குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.