புக்கிட் ஜாலில், ஜூலை 11-
கடந்த ஜூலை 2 ஆம் அன்று புக்கிட் ஜாலில் அவான் பெசார் எல் ஆர் டி ரயில் சேவை நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 6 கார்களின் கண்ணாடிகளை உடைத்த 42 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளதாக செராஸ் வட்டார போலீஸ் நிலையத்தின் தலைவர் துணை கமிஸ்னர் ரவிந்தர் சிங்க் சர்ப்ப சிங்ம் தெரிவித்தார்.
காரில் வைக்கப்பட்டிருந்த பொருட்களைத் திருடும் நோக்கத்திற்காக உடைக்கப்பட்ட காரின் கண்ணாடிகள் தொடர்பான காணொளிகள் வலைத்தளங்களில் பரவி வந்ததன் நிமித்தமான அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஆடவரின் மீது அதிகப்பட்சமான போதைபொருள் குற்றங்களும் தபால் நிலையங்களில் உள்ள பொட்டங்களை திருடுவதும், மேலு ம்பிற இதர குற்றங்களும் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ரவிண்டர் சிங் தெரிவித்தார்.