கோலாலம்பூர், ஜூலை 12-
சிலாங்கூரிலுள்ள மக்கள் வீடமைப்பு திட்டம் – PPR-ரின் குடியிருப்பு பகுதி ஒன்றில், முச்சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த KANCIL வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டதோடு, திசு துண்டில் எச்சரிக்கை குறிப்பு வைக்கப்பட்ட சம்பவம்./
தனது வாகனத்தை அங்கிருந்து நகர்த்துவதற்கு ஏதும் கேட்டுக்கொள்ளாமலேயே, பொறுப்பற்ற நபர், அத்தகைய சதிநாச வேலையில் ஈடுபட்டுள்ளது குறித்து, FACEBOOK-க்கில் மனகுமுறலை வெளிப்படுத்தியுள்ளார், அக்காரின் உரிமையாளர்.
தனது வாகனத்தை நிறுத்திவைப்பதற்கு இடமில்லாததாலேயே, அவ்விடத்தில் தாம் நிறுத்திவைத்ததாக கூறிய அவர், தமது வாகனத்தை இதர வாகனமோட்டிகள் நகர்த்துவதற்கு ஏதுவாக, கை பிரேக்கையும் போட்டிருக்கவில்லை என்றார்.