பேராக்,ஜூலை 12-
பேராக், பாகன் சேரை, பரீட் மேட் கெலிங் -கில் உள்ள தோட்டத்தில், செம்பனை குலையை வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த ஆடவரின் தலையில் குலை விழுந்ததில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் மணி 1.15 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், 49 வயதுடையஜமாலுட்டின் அரிபின் எனும் அவ்வாடவர், உடல் அசைவின்றி படுத்திருந்தவாறு கிடந்ததை கண்டு, அத்தோட்டத்தின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
அவ்வாடவரின் உடல் விறைப்படைந்திருந்ததால், அங்கு வரவழைக்கப்பட்டிருந்த, மருத்துவ அதிகாரிகள் அவர் உயிரிழந்துவிட்டதை உறுதிபடுத்தினர்.