கிளாந்தான், ஜூலை 12-
கிளாந்தான், தும்பட், கம்போங் புக்கிட்-ட்டிலுள்ள வீட்டில், தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி, திடிரென ஏற்பட்ட தீ விபத்தில், தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
நேற்று இரவு மணி 8.03 அளவில், துஞ்சோங் தீயணைப்பு மீட்பு படையினர், நிகழ்விடத்தை வந்தடைந்த போது, அம்மூதாட்டியின் வீடு, 70 விழுக்காடு வரையில் தீக்கிரையாகியிருந்தது.
பின்னர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, வீட்டினுள் நுழைந்த தீயணைப்பு வீரர்கள், படுக்கையறையில் அம்மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றினர்.
மேல்கட்ட நடவடிக்கைக்காக, சடலம் போலிசிடம் ஒப்படைக்கப்பட்டது.