பெட்டாலிங் ஜெயா, ஜூலை 12-
நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படுவதற்காக, மக்களால் வலியுறுத்தப்பட்டு வந்த கட்சித் தாவல் தடுப்பு சட்டம், பயனற்று போய்விட்டதாக, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மல் சாலிஹ் சாடினார்.
பெர்சாத்து கட்சி தலைமைத்துவத்தின் முடிவுக்கு எதிராக செயல்பட்டிருந்த, அதன் 6 முன்னாள் உறுப்பினர்களின் நாடாளுமன்ற தொகுதிகளை, மக்களவை தலைவர் தன் ஸ்ரீ ஜோஹ்ரி அப்துல் காலியானதாக அறிவிக்காததைச சுட்டிக்காட்டி, அவர் அக்கூற்றை முன்வைத்துள்ளார்.
தங்களது சுயநலத்திற்காக மட்டுமே,நாட்டில் அரசியல் நிலைமைத்தன்மை பேசப்படுகின்றது.
இதன் பிறகு அரசியல்வாதிகளை மக்கள் வெறுத்தால் கோபப்படகூடாது என வலியுறுத்திய அக்மல், அரசியல் தவளைகள் நாட்டை சீரழிக்கட்டும் என்றார்.