பெட்டாலிங் ஜெயா, ஜூலை 12-
PAS கட்சியிலும் இதற்கு முந்தையக் காலங்களில், மக்கள் பிரதிநிதிகள் கட்சி தாவலில் ஈடுபட்டுள்ளதை, பெர்சாத்து கட்சி நினைவுறுத்தியுள்ளது.
பெர்சாத்து கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கட்சி தாவலில் ஈடுபடுவதால், வரக்கூடிய கிளாந்தான் நீங்கிரி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில், தங்கள் கட்சியைச் சேர்ந்தவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென அம்மாநில PAS கட்சி இதற்குமுன்பு வலியுறுத்தியிருந்தது.
அது தொடர்பில் கருத்துரைத்த போது, அக்கூற்றை முன்வைத்துள்ள கிளாந்தான் பெர்சாத்து தலைவர் காமரூட்டின் மட் நோர் தங்கள் கட்சி மட்டுமின்றி, PAS, UMNO முதலான கட்சிகளிலும் அவற்றின் மக்கள் பிரதிநிதிகள் கட்சி தாவலில் ஈடுபட்டுள்ளதால், அவ்விவகாரம் குறித்து பேச வேண்டியதில்லை என்றார்.