HEGU BARD மீதான வழக்கு விசாரணை நவம்பர் 26ஆம் தேதி தொடங்கும்.

கோலாலம்பூர், ஜூலை 12-

பேரரசர் சுல்தான் இப்ராஹிம்-ம்மின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் அவதூறான கூற்றை வெளியிட்டிருந்த விவகாரம்.

பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவு செயற்குழு உறுப்பினர் CHEGU BARD என்றழைக்கப்படும் பட்ருள் ஹிஷாம் ஷஹாரின் மீதான அவதூறு வழக்கின் விசாரணை, இவ்வாண்டு நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில்,கோல லும்பூர் சேஸ்யேன் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

அவ்வழக்குக்கு தொடர்பான ஆவணங்கள், தற்காப்பு தரப்பிடம் வழங்கப்பட்டுவிட்டதாக, நேற்று நடைபெற்ற வழக்கு நிர்வகிப்பின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தீன் கல்மிசஹ் சல்லெஹ் கூறியதை அடுத்து, நீதிபதி சிட்டி அமின்ஹ காஸழி , அவ்விரு தேதிகளை நிர்ணயம் செய்தார்.

45 வயதுடைய CHEGU BARD, பேரரசருக்கு எதிராக அவதூறு தன்மையிலான கூற்றுகளை வெளியிட்டது தொடர்பில், இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS