கோலாலம்பூர், ஜூலை 12-
பெர்சாத்து கட்சி முன்னாள் உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷீத் ஆசரி-யின் சாலட் கிள்ளான் சட்டமன்ற தொகுதி, காலியானதாக அறிவிக்கப்படாது என சிலாங்கூர் சட்டமன்ற தலைவர் லாவ் வெங் சான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பெர்சாத்து கட்சியிலிருந்து, அப்துல் ரஷீத் நீக்கப்பட்டுள்ளது, மாநில அரசியலைமைப்பின் படி, திட்டமிடப்பட்ட ஒன்று என்பது கண்டறியப்பட்டுள்ளதால், தாம் அம்முடிவை எடுத்திருப்பதாகவும் நேற்றைய சட்டமன்ற கூட்டத்தில் அவர் கூறினார்.
சாலட் கிள்ளான் சட்டமன்ற தொகுதி, எதிர்பாராவிதமாக காலியானதாக அறிவிக்கும்படி, மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் டத்தோ சேரி மொதமேது அஸ்மின் அலி-யிடமிருந்து, கடந்த ஜூன் 20ஆம் தேதியிடப்பட்ட நோட்டிஸை தாம் பெற்றிருந்தாலும், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றாரவர்.