கோலாலம்பூர், ஜூலை 12-
2011 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மே 31 ஆம் தேதி வரை 6,969 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
மலேசியத் திறன் மிக்க நிபுணர்களை மலேசியாவிற்குத் திரும்ப ஈர்ப்பதற்காக பல்வேறு வரி விலக்குகள் உட்பட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
இதற்காக MyHeart திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், TalentCorp மூலம் இது வழிநடத்தப்படும் என்றும் சிம் கூறினார்.
MyHeart மலேசியாவில் பல்வேறு வேலை வாய்ப்புகள், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி, உள்ளூர் நிறுவனங்களுடன் ஒத்துழைக்கும் வாய்ப்புகள், வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுக்கான அனுமதிகள் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் புதுப்பித்தல்கள் மூலம் மலேசியாவில் மீண்டும் ஒருங்கிணைவதற்கான வழிகளை எளிதாக்கும் என்று அவர் இன்றைய நாடாளுமன்ற கேள்விப் பதில் நேரத்தின் போது தெரிவித்தார்!