பெட்டாலிங் ஜெயா, ஜூலை 12-
புகைபிடிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கும், காட்சிப்படுத்துவதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுச் சட்டம் 1983 இன் கீழ் 2004 ஆம் ஆண்டு புகையிலை தயாரிப்பு கட்டுப்பாடு விதிகளின் 10 வது பிரிவின் கீழ் விற்பனை இயந்திரங்கள் மூலம் இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சமூகப் பொறுப்பாக விற்பனை இயந்திரங்களின் செயல்பாட்டை நிர்வாகம் உடனடியாக நிறுத்துமாறு அமைச்சு அந்நிறுவனத்திற்குப் பரிந்துரைத்தது, அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டு இணங்கியதாக அமைச்சு தெரிவித்தது!