34 வயதிலேயே ஓய்வை அறிவித்த ஜேர்மனியின் மிரட்டல் வீரர்! சோகத்தில் ரசிகர்கள்

ஜேர்மனி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

தாமஸ் முல்லர்

நடப்பு யூரோ 2024 தொடரில் ஜேர்மனி அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் காலியிறுதியில் தோல்வியுற்றது.

அதனைத் தொடர்ந்து ஜேர்மனி அணியின் மூத்த வீரர் டோனி குரூஸ் (Tony Kroos) ஓய்வை அறிவித்தார். 

Thomas Muller/Germany

இந்த நிலையில், ஜேர்மனியின் மற்றொரு நட்சத்திர வீரரான தாமஸ் முல்லரும் (Thomas Muller) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

5 கோல்கள் 

2010யில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக அறிமுகமான முல்லர், அதே ஆண்டு நடந்த உலகக்கிண்ணத் தொடரில் 5 கோல்கள் அடித்து மிரட்டினார். 

அதேபோல் 2014ஆம் ஆண்டு ஜேர்மனி அணி உலகக்கிண்ணத்தை வெல்ல காரணமாக அமைந்த முல்லர், அந்த தொடரிலும் 5 கோல்கள் அடித்திருந்தார். 

Thomas Muller/Germany

ஜேர்மனி அணிக்காக 131 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள முல்லர் 45 கோல்கள் அடித்துள்ளார். 34 வயதாகும் தாமஸ் முல்லர் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS