பஹாங்,ஜூலை 13-
பஹாங்கில் உள்ள 11 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட HAWK சோதனையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் நான்கு பெண்கள் உட்பட முன்னூற்று 23 பேர் கைதாகினர்.
போதைப் பொருள் கடத்தல் தளங்கள், போதைப் பித்தர்கள் மறைந்திருக்கும் இடங்கள், கேளிக்கை மையங்கள் போன்ற குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும் இடங்களில் நான்கு நாட்கள் 193 சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.
அதில் 16 முதல் 63 வயதுடைய அவர்கள் அனைவரும் கைதானதாக மாநில போலீஸ் துணைத் தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார்.
போதைப் பொருள் குற்றங்களுக்காக வலைவீசப்பட்ட எட்டு ஆடவர்களும் அதிலடங்குவர்.
கைதானவர்களில் 32 பேர் மீது 1952 அபாயகர போதைப் பொருள் சட்டம் 39C பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதை Datuk Noor Hisam Nordin கோடிகாட்டினார்.
சோதனையின் மூலம் 97 ஆயிரத்து 147 ரிங்கிட் மதிப்பிலான heroin, methamphetamine, syabu, ganja, கெத்தும் நீர் உள்ளிட்ட பல்வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதனுடன் கார்களும், 45 ஆயிரத்து 200 ரிங்கிட் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.