இலக்கிடப்பட்ட உதவித்தொகை அமலாக்கம் டீசல் கடத்தலை முறியடித்துள்ளது

கோலாலம்பூர்,ஜூலை 14-

கடந்த மாதம் 10-ஆம் தேதி இலக்கிடப்பட்ட டீசல் உதவித்தொகை அமலாக்கப்பட்டது முதல் அந்த எரிபொருளின் அன்றாட சராசரி விற்பனை 23 விழுக்காடு அதவாது இரண்டு கோடியே 22 லட்சம் லிட்டருக்கு குறைந்துள்ளது.

ஜூன் தொடக்கத்தில் டீசலின் அன்றாட சராசரி விற்பனை இரண்டு கோடியே 86 லட்சம் லிட்டராக இருந்தது.

விற்பனை விகிதம் குறைந்திருப்பதன் மூலம் மாதம் 25 கோடி ரிங்கிட்டிற்கும் கூடுதலான முறைகேடுகளை தவிர்க்க முடிந்திருப்பதாக இரண்டாம் நிதித் துணையமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரி்வித்தார்.

அதேவேளை அதே காலக்கட்டத்தில் வணிக ரீதியில் டீசலின் விற்பனை நாள் ஒன்றுக்கு 48 லிட்டர் அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதோடு நாட்டின் வடக்கிலுள்ள எல்லைப்பகுதிகளில் டீசல் கொள்முதல் விகிதமும் ஐம்பது விழுக்காடு குறைந்துள்ளது.
அது லாபம் ஈட்ட முடியாத காரணத்தால், அண்டை நாடுகளுக்கு டீசலை கடத்தும் நடவடிக்கைகள் குறைந்திருப்பதை புலப்படுத்துவதாக டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS