ரிங்கிட் மதிப்பு வலுப்படுத்தப்படும்

கோலாலம்பூர்,ஜூலை 14-

இவ்வாண்டின் பிற்பாதியில் நாட்டின் நிதிநிலை மேன்மையுறும் என டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நிதி அமைச்சுக்கும், தேசிய வங்கிக்கும், துறை சார்ந்த நிறுவனங்கள்-உடனான ஒத்துழைப்பின் வாயிலாகவும், திறமையான நிதி நிர்வாகத்தின் மூலமாக அந்த வளர்ச்சியை எட்ட முடியும் என அவர் கூறினார்.

இதற்கு முன் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 4.70-ஆக இருந்தது. இப்போது அதன் மதிப்பு 4.68-ஆக உயர்ந்துள்ளது.

அது நாட்டின் நிதி அமைப்புகளிடையே உள்ள ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை புலப்படுத்துகிறது.
நிதிச் சந்தையில் நாட்டின் சராசரி தினசரி வர்த்தக மதிப்பு 17.6 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.

அதன் மூலம் ஆசியான் வட்டார நாடுகளிலேயே ரிங்கிட்டின் மதிப்பு இரண்டு விழுக்காடு உயர்வாக உள்ளது.
அது வட்டார நாணய பட்டியலில் ரிங்கிட் முதலிடத்தில் கோலோச்ச வகை செய்திருப்பதாக டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS