கோலாலம்பூர்,ஜூலை 14-
FELDA-வுக்கு கூடுதல் 10 கோடி ரிங்கிட் நிதியை உடனடியாக பகிர்ந்தளிக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் ஒப்புதல் அளித்தார்.
இலக்கிடப்பட்ட உதவித்தொகை செயலாக்கத்தை தொடர்ந்து தோட்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்கான செலவுகளை ஈடுகட்டும் வகையில் அந்நிதி வழங்கப்படுகிறது.
அத்துடன் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருப்பதையும் அது உறுதிப்படுத்தும் என நிதி அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, முன்னூற்று 17 FELDA நிலங்களில் நடத்தப்படவுள்ள Program Sejahtera Komuniti (SEJATI) MADANI – வளப்பமிகு மடானி சமூகத் திட்டத்திற்கென மூன்று கோடியே 17 லட்சம் ரிங்கிட்டை டத்தோ ஸ்ரீ அன்வர் அறிவித்தார்.
விவசாயம், கைவினை, சுகாதாரம், சுற்றுலா முதலிய FELDA வாழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அந்த நிதி கொடுக்கப்படுகிறது.